இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலரே

  மலரே நீ அழகில்லை மலரே நீ மணமில்லை மலரே நீ மென்மையில்லை மலரே நீ மேன்மையில்லை ஏன் என்றால் என்னவள் கூந்தலில் நீ இல்லை.                                        -இலக்கியன் 

மறைக்காமல் சொல்

  மலர்களிடம் மணமும் அழகும் தேனும் உள்ளன ! மனமே! உன்னிடம் உள்ளது என்ன ? மறைக்காமல் சொல் !                                       -இலக்கியன்

வந்ததால் சென்றது

  ஆசை வந்தது அள்ளிச் சென்றது நிம்மதியை! ஆணவம் வந்தது அபகரித்துச் சென்றது மகிழ்ச்சியை! கோபம் வந்தது கொண்டு சென்றது நற்குணத்தை! காமம் வந்தது களவாடிச் சென்றது மானத்தை! சோம்பல் வந்தது தூக்கிச் சென்றது தொழிலை! திருடன் வந்தான் திருடிச் சென்றான் செல்வத்தை! எமன் வந்தான் எடுத்துச் சென்றான் உயிரை.                          -இலக்கியன் 

அங்குசம்

  உன்னிடம் அங்குசம் இருந்தால் உள்ளத்தை அடக்கும் பாகன் நீ ! உள்ளத்திடம் அங்குசம் இருந்தால் உன்னைக் கொல்லும் யானை அது !                                            -இலக்கியன்

இளந்தென்றல்

  கோடை வெயில் -என் ஆடைகளை நனைத்தது! புழுக்கத்தில் நான் புழுங்கிக் கொண்டிருந்தேன்! இளந் தென்றல் என் மீது வீசியது! திரும்பிப் பார்த்தேன்! திருப்பத்தில் அவள் சென்று மறைந்தாள்!                                              -இலக்கியன்

ஒற்றுமை

சிறுத்தைக் கூட்டம் என்றாலும் சிற்றெறும்புக் கூட்டம் வெல்லும்! ஒற்றுமை உள்ளதென்றால்.                                        -இலக்கியன்  

காதலன்-காதலி

காதலன் அழைத்தான்! காதலோடு சென்றாள் காதலி!! மனையைக் காட்டினான் தனை மறந்து வியந்தாள்! வரவேற்பறையைக் காட்டினான் பரம்பொருள் இல்லம் போல் இருந்தது சாமியறையைக் காட்டினான் பூமியில் தான் இல்லாததுபோல் இருந்தது! சமையலறையைக் காட்டினான் அமைவெல்லாம் அமைந்ததாக இருந்தது! நிலைப்பேழையைக் காட்டினான் அலைகடல்போல் செல்வம் இருந்தது! பள்ளியறையைக் காட்டினான் சொல்லொணாத் தோற்றமாக இருந்தது! உள்ளதெல்லாம் காட்டிய பின் உள்ளத்தைக் காட்டினான் குவிந்து கிடந்தன குப்பைகள் !!!.                                  -இலக்கியன் 

இருப்பது இல்லாதது

எல்லாம் இருப்பவனை மனிதர் விரும்புவர் எதுவும் இல்லாதவனை இறைவன் விரும்புவான் இருப்பது எதுவோ அது இல்லாதது இல்லாதது எதுவோ அது இருப்பது அறிந்தவன் அறிஞன் - இதை அறியாதவன் வறிஞன்.                                -இலக்கியன்

கணக்கு

அன்பைக் [+] கூட்டு ஆணவத்தைக் [-] கழி இன்பத்தை [÷] வகு   ஈகையைப் [×] பெருக்கு அவ்வளவு தான் வாழ்க்கைக் கணக்கு! அறிந்துகொள் மனிதா ! மதிப்பெண் நூறும் மதிக்கும் ஊரும் பெறுவாய் !                          -இலக்கியன்

அகம்

அகத்தில் அறம் இருக்கட்டும்! முகத்தில் நிறம் இல்லாவிட்டாலும் அகத்தில் அறம் இருக்கட்டும்!! செயலில் தரம் இருக்கட்டும்! இயல்பில் உரம் இல்லாவிட்டாலும் செயலில் தரம் இருக்கட்டும்!! உனக்குள் அருள் இருக்கட்டும்! உன்னிடம் பொருள் இல்லாவிட்டாலும் உனக்குள் அருள் இருக்கட்டும்!!                                   -இலக்கியன் 

தமிழ்

எம் தமிழ் வாழ்க! எண்திக்கும்... யாண்டும்... மண் கண்ட முதல் மொழி விண் கொண்ட முதல் மொழி ஒண்மை செறிந்த தன்மை செறிந்த பழைமை என்னும் இளமை செறிந்த அமிழ்தாம் -எம் தமிழ் வாழ்க! எண்திக்கும்.. யாண்டும்... எம் தமிழ் வாழ்க! எம் தமிழ் வாழ்க!! எம் தமிழ் வாழ்க!!!                                              -இலக்கியன்