காதலன்-காதலி


காதலன் அழைத்தான்!

காதலோடு சென்றாள் காதலி!!

மனையைக் காட்டினான்
தனை மறந்து வியந்தாள்!

வரவேற்பறையைக் காட்டினான்
பரம்பொருள் இல்லம் போல் இருந்தது

சாமியறையைக் காட்டினான்
பூமியில் தான் இல்லாததுபோல் இருந்தது!

சமையலறையைக் காட்டினான்
அமைவெல்லாம் அமைந்ததாக இருந்தது!

நிலைப்பேழையைக் காட்டினான்
அலைகடல்போல் செல்வம் இருந்தது!

பள்ளியறையைக் காட்டினான்
சொல்லொணாத் தோற்றமாக இருந்தது!

உள்ளதெல்லாம் காட்டிய பின்
உள்ளத்தைக் காட்டினான்
குவிந்து கிடந்தன
குப்பைகள் !!!.

                                 -இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

கணக்கு