அகம்
அகத்தில் அறம் இருக்கட்டும்!
முகத்தில் நிறம் இல்லாவிட்டாலும்
அகத்தில் அறம் இருக்கட்டும்!!
செயலில் தரம் இருக்கட்டும்!
இயல்பில் உரம் இல்லாவிட்டாலும்
செயலில் தரம் இருக்கட்டும்!!
உனக்குள் அருள் இருக்கட்டும்!
உன்னிடம் பொருள் இல்லாவிட்டாலும்
உனக்குள் அருள் இருக்கட்டும்!!
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக