வந்ததால் சென்றது
ஆசை வந்தது
அள்ளிச் சென்றது நிம்மதியை!
ஆணவம் வந்தது
அபகரித்துச் சென்றது மகிழ்ச்சியை!
கோபம் வந்தது
கொண்டு சென்றது நற்குணத்தை!
காமம் வந்தது
களவாடிச் சென்றது மானத்தை!
சோம்பல் வந்தது
தூக்கிச் சென்றது தொழிலை!
திருடன் வந்தான்
திருடிச் சென்றான் செல்வத்தை!
எமன் வந்தான்
எடுத்துச் சென்றான் உயிரை.
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக