இடுகைகள்

மௌனம் வலியது

  அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது அறிவாளியிடம் மட்டுமே எடுபடும்! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனுக்குத் தெரியாது பெருமையுள்ளவர்க்கே தெரியும்! தரமற்றதிடம் பேசித் தரம் தாழாமல் இருக்க மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் சொல்லைவிட வலியது!                           -இலக்கியன் 

கனவின் எடை

  ஓராயிரம் கனவுகளின் எடையை விட ஒரு கவலையின் எடை மிக அதிகம் ஓராயிரம் கவலைகளின் மதிப்பை விட ஒரு கனவின் மதிப்பு மிக அதிகம் கவலைகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்வது இல்லை கனவுகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்ந்து விடும் அருமை இதயமே அதனால் சுமக்காமல் கவலையைத் தவிர்க்கவும் சுமப்பதென்றால் கனவைச் சுமக்கவும்.                             -இலக்கியன் 

அவதாரம்

  இழிபிறவிகளே எம்மை அவமதியுங்கள் இழிபிறவிகளே எம்மை அவமானப் படுத்துங்கள் இழிபிறவிகளே எம்மை எதிர்த்துப் பேசுங்கள் இழிபிறவிகளே எம்மை இகழ்ந்து பேசுங்கள் இழிபிறவிகளே எம்மீது குற்றம் சுமத்துங்கள் இழிபிறவிகளே எமக்குச் சாபம் கொடுங்கள் இழிபிறவிகளே எம்மை ஏமாற்ற முயலுங்கள் இழிபிறவிகளே எமக்குக் கெடுதல் நினையுங்கள் அவையே உங்களை அழிக்கும் கருவிகள் அதற்காகவே எமது இந்த அவதாரம்.                                     -இலக்கியன்

காதல்

  கொடியது உலகில் எது என்றால் காதலே! அடிமைகள் உலகில் யார் என்றால் காதலர்களே! உள்ளுள் இருந்து வெல்லும் பகை காதல்! மெல்ல உயிரைக் கொல்லும் நஞ்சு காதல்!                                -இலக்கியன் 

மனிதன்

  குரங்காய் இருந்து மாறியது உடம்பு குரங்கிலிருந்து மாறவே இல்லை குணம்.                                                         -இலக்கியன் 

அறிவாயுதம்

  வெல்ல நினைப்பவனை வெல்லும் ஆயுதம் அறிவு கொல்ல வருபவனைக் கொல்லும் ஆயுதம் அறிவு பண ஆயுதப் படையையும் ஒழிக்கும் மன ஆயுதம் அறிவு பல்லாயுதப் படையையும் வெல்லும் வல்லாயுதம் அறிவு போர் அறிவிற்கும் அறிவின் பகைக்கும் போர் போர் அறிவிற்கும் அறியாமைக்கும் போர் போர் அறிவாளிக்கும் அறிவிலிக்கும் போர் போர் அறிவாயுத்திற்கும் மடவாயுதத்திற்கும் போர் போர்க்களத்தில் அறிவை வெல்லுமோ மடமை போர்க்களத்தில் அறிவைக் கொல்லுமோ மடமை புறமுதுகிட்டு ஓடும் - அல்லது புறமுதுகில் குத்துப்பட்டுச் சாகும்.                                  -இலக்கியன் 

இரண்டும் கொண்டது ஒன்று

  பிறப்பும் இறப்பும் கொண்டது பிறவி மறப்பும் நினைவும் கொண்டது மூளை தலையும் பூவும் கொண்டது நாணயம் தலைவனும் தலைவியும் கொண்டது இல்லறம் நன்மையும் தீமையும் கொண்டது உலகம் உண்மையும் பொய்யும் கொண்டது வாய் வெப்பமும் குளிரும் கொண்டது காலம் வேட்கையும் வெறுப்பும் கொண்டது மனம் இரவும் பகலும் கொண்டது நாள் இன்பமும் துன்பமும் கொண்டது வாழ்க்கை.                                          -இலக்கியன்