அவதாரம்
இழிபிறவிகளே எம்மை அவமதியுங்கள்
இழிபிறவிகளே எம்மை அவமானப் படுத்துங்கள்
இழிபிறவிகளே எம்மை எதிர்த்துப் பேசுங்கள்
இழிபிறவிகளே எம்மை இகழ்ந்து பேசுங்கள்
இழிபிறவிகளே எம்மீது குற்றம் சுமத்துங்கள்
இழிபிறவிகளே எமக்குச் சாபம் கொடுங்கள்
இழிபிறவிகளே எம்மை ஏமாற்ற முயலுங்கள்
இழிபிறவிகளே எமக்குக் கெடுதல் நினையுங்கள்
அவையே உங்களை அழிக்கும் கருவிகள்
அதற்காகவே எமது இந்த அவதாரம்.
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக