கனவின் எடை

 

ஓராயிரம் கனவுகளின் எடையை விட
ஒரு கவலையின் எடை மிக அதிகம்

ஓராயிரம் கவலைகளின் மதிப்பை விட
ஒரு கனவின் மதிப்பு மிக அதிகம்

கவலைகளைச் சுமக்கின்ற இதயப் படகு
கரை சேர்வது இல்லை

கனவுகளைச் சுமக்கின்ற இதயப் படகு
கரை சேர்ந்து விடும்

அருமை இதயமே
அதனால்

சுமக்காமல் கவலையைத் தவிர்க்கவும்
சுமப்பதென்றால் கனவைச் சுமக்கவும்.


                            -இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

மலரே