இடுகைகள்

அறிவாயுதம்

  வெல்ல நினைப்பவனை வெல்லும் ஆயுதம் அறிவு கொல்ல வருபவனைக் கொல்லும் ஆயுதம் அறிவு பண ஆயுதப் படையையும் ஒழிக்கும் மன ஆயுதம் அறிவு பல்லாயுதப் படையையும் வெல்லும் வல்லாயுதம் அறிவு போர் அறிவிற்கும் அறிவின் பகைக்கும் போர் போர் அறிவிற்கும் அறியாமைக்கும் போர் போர் அறிவாளிக்கும் அறிவிலிக்கும் போர் போர் அறிவாயுத்திற்கும் மடவாயுதத்திற்கும் போர் போர்க்களத்தில் அறிவை வெல்லுமோ மடமை போர்க்களத்தில் அறிவைக் கொல்லுமோ மடமை போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடும் - அல்லது போர்க்களத்தில் புறமுதுகில் குத்திச் சாகும்.                                  -இலக்கியன் 

இரண்டும் கொண்டது ஒன்று

  பிறப்பும் இறப்பும் கொண்டது பிறவி மறப்பும் நினைவும் கொண்டது மூளை தலையும் பூவும் கொண்டது நாணயம் தலைவனும் தலைவியும் கொண்டது இல்லறம் நன்மையும் தீமையும் கொண்டது உலகம் உண்மையும் பொய்யும் கொண்டது வாய் வெப்பமும் குளிரும் கொண்டது காலம் வேட்கையும் வெறுப்பும் கொண்டது மனம் இரவும் பகலும் கொண்டது நாள் இன்பமும் துன்பமும் கொண்டது வாழ்க்கை.                                          -இலக்கியன்

துன்பம்

  நான் படுத்திருந்து பார்த்தேன் மலையாக இருந்தது! நான் எழுந்து நின்று பார்த்தேன் கடுகாக ஆனது!! நான் கீழிருந்து பார்த்தேன் கடலாக இருந்தது! நான் மேலிருந்து பார்த்தேன் துளியாக ஆனது!! நான் அதிர்ந்து பார்த்தேன் துன்பமாக இருந்தது! நான் உணர்ந்து பார்த்தேன் இன்பமாக ஆனது !! நான் சுமக்க மறுத்தேன் சுமையாக இருந்தது! நான் சுமந்து பழகினேன் இலகுவாக ஆனது!! நான் பயத்தோடு பார்த்தேன் கடிக்க வந்தது! நான் துணிவோடு பார்த்தேன் ஓடிவிட்டது!!                                          -இலக்கியன்

மலரே

  மலரே நீ அழகில்லை மலரே நீ மணமில்லை மலரே நீ மென்மையில்லை மலரே நீ மேன்மையில்லை ஏன் என்றால் என்னவள் கூந்தலில் நீ இல்லை.                                        -இலக்கியன் 

மறைக்காமல் சொல்

  மலர்களிடம் மணமும் அழகும் தேனும் உள்ளன ! மனமே! உன்னிடம் உள்ளது என்ன ? மறைக்காமல் சொல் !                                       -இலக்கியன்

வந்ததால் சென்றது

  ஆசை வந்தது அள்ளிச் சென்றது நிம்மதியை! ஆணவம் வந்தது அபகரித்துச் சென்றது மகிழ்ச்சியை! கோபம் வந்தது கொண்டு சென்றது நற்குணத்தை! காமம் வந்தது களவாடிச் சென்றது மானத்தை! சோம்பல் வந்தது தூக்கிச் சென்றது தொழிலை! திருடன் வந்தான் திருடிச் சென்றான் செல்வத்தை! எமன் வந்தான் எடுத்துச் சென்றான் உயிரை.                          -இலக்கியன் 

அங்குசம்

  உன்னிடம் அங்குசம் இருந்தால் உள்ளத்தை அடக்கும் பாகன் நீ ! உள்ளத்திடம் அங்குசம் இருந்தால் உன்னைக் கொல்லும் யானை அது !                                            -இலக்கியன்