இரண்டும் கொண்டது ஒன்று

 

பிறப்பும் இறப்பும் கொண்டது பிறவி

மறப்பும் நினைவும் கொண்டது மூளை

தலையும் பூவும் கொண்டது நாணயம்
தலைவனும் தலைவியும் கொண்டது இல்லறம்

நன்மையும் தீமையும் கொண்டது உலகம்
உண்மையும் பொய்யும் கொண்டது வாய்

வெப்பமும் குளிரும் கொண்டது காலம்
வேட்கையும் வெறுப்பும் கொண்டது மனம்

இரவும் பகலும் கொண்டது நாள்
இன்பமும் துன்பமும் கொண்டது வாழ்க்கை.

                                         -இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

மலரே