அறிவாயுதம்

 


வெல்ல நினைப்பவனை
வெல்லும் ஆயுதம் அறிவு
கொல்ல வருபவனைக்
கொல்லும் ஆயுதம் அறிவு

பண ஆயுதப் படையையும் ஒழிக்கும்
மன ஆயுதம் அறிவு
பல்லாயுதப் படையையும் வெல்லும்
வல்லாயுதம் அறிவு

போர் அறிவிற்கும் அறிவின் பகைக்கும் போர்
போர் அறிவிற்கும் அறியாமைக்கும் போர்
போர் அறிவாளிக்கும் அறிவிலிக்கும் போர்
போர் அறிவாயுத்திற்கும் மடவாயுதத்திற்கும் போர்

போர்க்களத்தில் அறிவை வெல்லுமோ மடமை
போர்க்களத்தில் அறிவைக் கொல்லுமோ மடமை
போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடும் - அல்லது
போர்க்களத்தில் புறமுதுகில் குத்திச் சாகும்.

                                 -இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு