துன்பம்
நான் படுத்திருந்து பார்த்தேன் மலையாக இருந்தது!
நான் எழுந்து நின்று பார்த்தேன் கடுகாக ஆனது!!
நான் கீழிருந்து பார்த்தேன் கடலாக இருந்தது!
நான் மேலிருந்து பார்த்தேன் துளியாக ஆனது!!
நான் அதிர்ந்து பார்த்தேன் துன்பமாக இருந்தது!
நான் உணர்ந்து பார்த்தேன் இன்பமாக ஆனது !!
நான் சுமக்க மறுத்தேன் சுமையாக இருந்தது!
நான் சுமந்து பழகினேன் இலகுவாக ஆனது!!
நான் பயத்தோடு பார்த்தேன் கடிக்க வந்தது!
நான் துணிவோடு பார்த்தேன் ஓடிவிட்டது!!
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக