இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மௌனம் வலியது

  அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது அறிவாளியிடம் மட்டுமே எடுபடும்! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனுக்குத் தெரியாது பெருமையுள்ளவர்க்கே தெரியும்! தரமற்றதிடம் பேசித் தரம் தாழாமல் இருக்க மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் சொல்லைவிட வலியது!                           -இலக்கியன் 

கனவின் எடை

  ஓராயிரம் கனவுகளின் எடையை விட ஒரு கவலையின் எடை மிக அதிகம் ஓராயிரம் கவலைகளின் மதிப்பை விட ஒரு கனவின் மதிப்பு மிக அதிகம் கவலைகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்வது இல்லை கனவுகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்ந்து விடும் அருமை இதயமே அதனால் சுமக்காமல் கவலையைத் தவிர்க்கவும் சுமப்பதென்றால் கனவைச் சுமக்கவும்.                             -இலக்கியன் 

அவதாரம்

  இழிபிறவிகளே எம்மை அவமதியுங்கள் இழிபிறவிகளே எம்மை அவமானப் படுத்துங்கள் இழிபிறவிகளே எம்மை எதிர்த்துப் பேசுங்கள் இழிபிறவிகளே எம்மை இகழ்ந்து பேசுங்கள் இழிபிறவிகளே எம்மீது குற்றம் சுமத்துங்கள் இழிபிறவிகளே எமக்குச் சாபம் கொடுங்கள் இழிபிறவிகளே எம்மை ஏமாற்ற முயலுங்கள் இழிபிறவிகளே எமக்குக் கெடுதல் நினையுங்கள் அவையே உங்களை அழிக்கும் கருவிகள் அதற்காகவே எமது இந்த அவதாரம்.                                     -இலக்கியன்